அமைப்பு
சிவகாசி முகநூல் நண்பர்கள் குழு 2014 ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2015 ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 5 ம் தேதி முதல் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை சுமார் 7 ஆண்டுகளாக மிக அதிக ஆற்றலுடன், சீறிய வேகத்தில் செயல்பட்டுவருகிறது.
இலக்கு
சாதி மத இன மொழி பாகுபாடு இல்லாமல் சிவகாசி நலன் சார்ந்த 'நம்மால்; நமக்காக; நாமாக' செயல்களை செய்வது தான் Team #SFF.
குட்டிச்சுவர் ஏறி வெட்டிக்கதை பேசிய கூட்டம் தான் நாங்களும். நாடென்ன செய்தது என்ற கேள்விக்கு மத்தியில் நாமென்ன செய்தோம் நாட்டிற்கு என்ற கேள்வியின் வேள்வி தான் Team #SFF.
நீர்நிலை மேலாண்மை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், விழிப்புணர்வு போன்ற விசயங்களில் எங்களால் இயன்றவற்றை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செய்து வருகிறோம். எங்களது கனவுகள் பெரியது! எங்களது இலக்குகள் பெரியது! உள்ளுவதெல்லாம் உயர்வுள்வோம்! போகும் பயணம் தூரம்; பயணிக்க பயணிக்க நீளும்!
செயல்பாடுகள்
உலகத்துல தலை சிறந்த சொல் செயல்ன்னு சொல்லுவாங்க. செயல் தான் அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளம் ஆகும். வார இறுதி நாட்களில் சனி இரவிலோ அல்லது ஞாயிறு காலையிலோ செயல்களை செய்ய ஆரம்பித்தோம். இந்த ஏழு வருடத்தில் குழு அணியாகி குடும்பமும் ஆனது.
சென்னை வெள்ளம், கஜா புயல், தானே புயல் ஆகிய இக்கட்டான சூழல்களில் நிவாரண பொருட்களை ஒருங்கிணைத்து கொண்டு சென்று சேர்த்துள்ளோம். 'தொடர் செயல்பாடுகள் முடியுமா?' என்ற ஐயம் வந்த வேளையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியாக வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதியவர்களுக்கு உணவு அளித்து, தேவைப்படுவோருக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் அளித்து, பொது இடங்களில் சமூக இடைவெளி பழக்கி பணிகளை தொடர்ச்சியாக 50 நாட்கள் செய்து வந்தோம்.
அந்த தொடர் ஓட்டம் தந்த ஊக்கத்திலும், உத்வேகத்திலும் மணிக்கட்டி ஊரணி என்ற பன்னீர் தெப்பத்தினை மராமத்து செய்து, கட்டுமானப் பணிகளை செய்து வருகிறோம். தினமும் காலை வேளையில் வெகுஜனம் பள்ளி செல்லும் சமயத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளை கடந்த மூன்று மாதமாக செய்து வருகிறோம். எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் எங்களது சரியான நோக்கத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு செயலை செய்து வருகிறோம். சரியான செயல்திட்டம், சரியான செயலாக்கத்துடன் எங்களது பயணம் எப்போதும் தொடரும்...
தொடர்பு கொள்ள
முகவரி
#30, தில்லை சிதம்பரம் தெரு, சிவகாசி - 626123
மின்னஞ்சல்
sivakasifacebookfriends@gmail.com
Whatsapp-ல் இணைய
+91 9178833456